.
 
 
 
 
 
 

டோனியின் முடிவு சரியானது: கங்குலி

.

Thursday, 05 January, 2017   04:21 PM
.
புதுடெல்லி, ஜன.5: கேப்டன் பதவியில் இருந்து விலகியது டோனியின் சரியான முடிவு என்று முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சவுரவ் கங்குலி கூறிஉள்ளார்.
.
சமீப காலமாக டோனியின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கில்லாடியாக திகழ்ந்த டோனி கடந்த சில ஆட்டங்களில் சொதப்பினார்.

மறுபக்கம் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் எழுச்சியும் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்ததுடன் ‘நம்பர் ஒன்’ அரியணையிலும் ஏறியது. இதனால் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்புகளையும் விராட் கோலியிடமே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனால் தீவிர ஆலோசனைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து முழுமையாக ஒதுங்கும் முடிவுக்கு டோனி வந்திருக்கிறார்.
இந்திய ஒரு போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி நேற்று விலகினார். அதே சமயம் ஒரு வீரராக தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அறிவித்துள்ளார். கேப்டன் பதவியை துறந்தாலும், 15–ந்தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் தொடருக்கான அணியின் தேர்வுக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி மும்பையில் நாளை தேர்வு செய்யப்படுகிறது. இதில் ஒரு நாள் போட்டி அணியின் புதிய கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்படுவார். அவரது கேப்டன்ஷிப்பின் கீழ் டோனி முதல் முறையாக இனி விக்கெட் கீப்பராக மட்டும் தொடருவார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகியது டோனியின் சரியான முடிவு என்று முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சவுரவ் கங்குலி கூறிஉள்ளார்.

மேலும் டோனியால் வரும் 2019 உலக கோப்பை வரையில் சிறப்பாக விளையாட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
டோனி இப்போதும் நேர்த்தியான ஆட்டக்காரராகவே உள்ளார். அவரால் அவரை ஊக்குவிக்க முடியும், 2019 உலக கோப்பை வரையில் அவரால் விளையாட முடியும் என்று சவுரவ் கங்குலி கூறிஉள்ளார். எதிர்காலம் மற்றும் இந்திய அணியின் தேவையை அடிப்படையாக கொண்டே டோனி இம்முடிவை அறிவித்து உள்ளார் என்றும் கங்குலி குறிப்பிட்டு உள்ளார். டோனியின் கேப்டன்ஷிப்பை ஒப்பீட மறுத்துவிட்டார். அவருடைய ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சாதனைகள் நம்மை பேசசெய்தது. அவர் அனைத்தையும் வென்றுவிட்டார். அனைத்து போட்டிகளிலும் சிறப்பான கேப்டனாக இருந்து உள்ளார் என்று கங்குலி பாராட்டி உள்ளார்.
| |

?????? :