.
 
 
 
 
 
 

இலங்கையில் வெள்ளம்: 169 பேர் பலி

.

Monday, 29 May, 2017   03:37 PM
.
கொழும்பு, மே 29:இலங்கையில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. 104 பேரைக் காணவில்லை. இந் நிலையில் நிவாரணப்பணிகளில் இந்தியா அங்கு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

.
இலங்கை தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு 8 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாகஇலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதனால் ஐந்து லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2000 பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் காவல்துறையினருக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டுள்ள தாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ரோஷன் செனவிரத்னே தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதின் பேரில், மிதவை படகுகள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் நிவாரணப் பொருள்களுடன் புறப்பட்டுள்ள ஐ என் எஸ் ஷர்துல் என்ற கப்பல் நேற்றே கொழும்பு துறைமுகத்தைச் சென்றடைந்தது. அந்த கப்பல் மற்றும் வீரர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐ.என்.எஸ். ஜலஷ்வா என்ற மற்றொரு கப்பல், மருந்துகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று மாலைகொழும்பு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக் கடற்படை வீரர்கள் மற்றும் அந்நாட்டு அதிகாரி களுடன் இந்தியக்குழுவும் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் 8 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையில் இது வரை 169 பேர் பலியாகி உள்ளனர் என்றும் இது வரை 104 பேர் காணவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இந் நிலையில் இந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் புறப்பட்ட 2 கப்பல்கள் அங்கு சென்றுள்ளதாகவும், பொருட்களை இறக்க அவர்கள் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| |

?????? :