.
 
 
 
 
 
 

அமெரிக்காவில் 4 இந்தியருக்கு தண்டனை

.

Tuesday, 06 June, 2017   04:03 PM
.
வாஷிங்டன், ஜூன் 6: அமெரிக்காவில், பண மோசடி மற்றும் மொபைலில் வேறு நபர் போல் ஏமாற்றி மோசடி செய்தது தொடர்பாக, 4 இந்தியர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட உள்ளது.
.
அமெரிக்காவில் பண மோசடியில் ஈடுபட்டதாக இந்தியாவை சேர்ந்த ராஜூபாய் படேல் விராஜ் படேல் திலிப் குமார் அம்பால் படேல் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பகாத் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தொலைபேசி மூலம் மோசடி செய்ததாக இந்தியாவை சேர்ந்த ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீதான வழக்கு டெக்சாஸ் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைவரும் குற்றத்தை ஒப்பு கொண்டனர். இதனையடுத்து அவர்களுக்கு விரைவில் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
| |

?????? :