.
 
 
 
 
 
 

அரையிறுதிக்குள் இந்தியா

.

Monday, 12 June, 2017   04:02 PM
.
லண்டன், ஜூன் 12:சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த முக்கியமான போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி தென்னாப்பிரிக்கா 44.3 ஓவர்களில் அந்த அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

.
நேற்றைய போட்டியில் கேப்டன் டிவில்லியர்ஸ், டேவிட் மில்லர், இம்ரான் தாஹீர் ஆகியோர் ரன் அவுட் முறையில் விக்கெட்களை இழந்து வெறியேறினர். ஆட்டத்தை மாற்றிய இந்த மூன்று ரன் அவுட்களும் போட்டியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.பின்னர் 192 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 38 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 12 ரன்களில் அவுட் ஆனாலும் ஷிகர் தவானும் கேப்டன் கோலியும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். தவான் 78 ரன்களில் அவுட் ஆனார். கோலி 76 ரன்களுடனும், யுவராஜ் சிங் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம், சாம்பியன்ஸ் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றதே இல்லை என்ற சென்டிமென்டை இந்திய அணி தக்க வைத்துக்கொண்டது.
| |

?????? :