.
 
 
 
 
 
 

இன்று இலங்கை-பாக் மோதல்

.

Monday, 12 June, 2017   04:07 PM
.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. கார்டிப்பில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் மேத்யூஸ் தலைமையிலான இலங்கையும், சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரைஇறுதிக்கு முன்னேறும். தோற்கும் அணி வாய்ப்பை இழந்து வெளியேறும். அதனால் இரு அணி வீரர்களும் களத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடும். இவ்விரு அணிகளும் இதுவரை 147 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 84-ல் பாகிஸ்தானும், 58-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. 4 ஆட்டங்களில் முடிவில்லை.
.
| |

?????? :