.
 
 
 
 
 
 

திமுக சார்பில் மனு தாக்கல்

.

Tuesday, 13 June, 2017   05:15 PM
.
சென்னை, ஜூன் 13: நம்பிக்கை தீர்மானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி
சாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்எல்ஏக்களுக்கு ரூ.6 கோடி வரை பணம் வழங்கப் பட்டதாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட கோரி சென்னை உயர்
நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. 

.
இதன் மீதான விசாரணை வரும் 16-ந் தேதி நடக்கிறது. கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை ஓட்டில் வாக்களிக்க ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி வரை பணம், தங்கம் தருவதாக உறுதியளிக்கப்பட்டது என்று எம்எல்ஏக்கள் சிலர் கூறியதாக பரபரப்பான பேட்டி வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் இன்று காலை வழக்கம் போல் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது திமுகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ. 6 கோடி வரை பணம் கொடுத்ததாக, சரவணன் என்ற சட்டமன்ற உறுப்பினரே சிலரிடம் கூறும் உரையாடல் அடங்கிய வீடியோவை, தனியார் தொலைக்காட்சி ஒன்று நேற்று வெளியிட்டது. இந்த சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, எனது கட்சிகாரர் வழக்கு தொடர உள்ளார். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், முதலில் மனுவை தாக்கல் செய்யுங்கள், அந்த வழக்கை வரும் வெள்ளியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
| |

?????? :