.
 
 
 
 
 
 

நடராசன் மறைவு: ஸ்டாலின் அனுதாபம்

.

Tuesday, 13 June, 2017   05:42 PM
.
சென்னை, ஜூன் 13: கோவை மாவட்டம் பேரூர் சட்ட மன்ற தொகுதி முன்னாள் உறுப் பினர் ஆ.நடராசன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் அனுதாபம் தெரிவித் துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்ட அவர் இன்று காலை பேரூரில் மரணம் அடைந்தார்.

.
தொ.மு.சா. பேரவையின் தலைவராகவும், செயலாளராகவும் அ.நடராசன் பணியாற்றி உள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அனுதாப செய்தியில், தொழிலாளர் கள் நலனுக்காக அரும்பாடுபட்டவர் அ.நடராசன். கோவை மாவட்டத்தில் கழகத்தின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தார். அவரது மறைவுக்கு கருணாநிதி சார்பிலும், திமுகவின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
| |

?????? :