.
 
 
 
 
 
 

அன்புமணி அறிக்கை

.

Tuesday, 13 June, 2017   05:44 PM
.
சென்னை, ஜூன் 13: சசிகலா அணி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், பன்னீர் 
செல்வம் அணி உறுப்பினர்களுக்கும் கையூட்டுகொடுத்து ஆட்சியைத் தக்க வைத்து ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் பினாமி அரசு இனியும்  நீடிக்கக்கூடாதுஎன்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

.
இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளைத் தடுக்க மத்திய மாநில அரசு அமைப்புகளும் தவறி விட்டன. ஆட்சிமாற்றம் நடைபெற்ற நேரத்தில் இரு அணிஉறுப்பினர்களுக்கும் பணம் பட்டுவாடாவும் தங்கமும் வழங்கப்பட்டன. ஒரு உறுப்பினருக்கு ரூ.6கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் என்றால் சசிகலா அணியில் இருந்த 122 உறுப்பினர்களுக்கும் குறைந்தபட்ச 732 கோடி வினியோகிக் கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு அமைப்புகளான சிபிஐ வருமானவரித்துறை, அமலாக்கப் பிரிவு உளவுத்துறை ஆகியவற்றுக்கும் தமிழக காவல்துறைக்கும் தெரியாமல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அல்லது அவர்களின் குடும்பத் தினரிடம் இவற்றையெல்லாம் எவரும் வினியோகித்திருக்க முடியாது. ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு ரூ. 4000 வீதம் கையூட்டு வழங்கப்பட்ட போது இந்த பணம் எங்கிருந்து வினியோகிக்கப்பட்டிருக்கும் என்பதை சரியாக யூகித்து சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தி ஆதாரங்களை பறிமுதல் செய்தது. சசிகலா அணி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், பன்னீர் செல்வம் அணி உறுப்பினர்களுக்கும் கையூட்டுகொடுத்து ஆட்சியைத் தக்க வைத்து ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் பினாமி அரசு இனியும் நீடிக்கக்கூடாது . மேலும் கையூட்டு பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கைமேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
| |

?????? :