.
 
 
 
 
 
 

ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

.

Monday, 26 June, 2017   04:23 PM
.
சென்னை, ஜூன் 26: மும்பையில் காலா பட சூட்டிங்கில் பங்கேற்றுள்ள ரஜினிகாந்த் அதை முடித்துக்கொண்டு ஜூலை 12-ம் தேதி அங்கிருந்து அமெரிக்கா செல்ல உள்ளார். ஒரு வாரம் அங்கு தங்கி மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு சென்னை திரும்ப உள்ளார்.
.
இயக்குநர் ரஞ்ஜித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் காலா. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை ஜூலை 10-ம் தேதிக்குள் முடித்துக்கொண்டு மும்பையில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க செல்ல உள்ளார். அங்கு ஒருவாரம் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளும் ரஜினிகாந்த் ஜூலை 20-ம் தேதிக்குப்பிறகு சென்னை திரும்ப உள்ளார். ஷங்கர் இயக்கி வரும் 2.0 படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்திற்கு கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக தனது மூத்த மகள் ஐஸ்வரியா உடன் அமெரிக்கா சென்ற ரஜினி ஒரு மாதம் அங்கு தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டார். இதனால் ரஜினிக்கு என்ன ஆனது என ரசிகர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. அவர் பற்றிய புகைப்படங்களும் வெளியாகாமல் இருந்தது. அதன் பிறகு ஆசிரமம் ஒன்றில் தனது மகளுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியடையச் செய்தது. சிகிச்சைகள் முடிந்து புதிய உத்வேகத்துடன் ரஜினி நாடு திரும்பினார். அதனை தொடர்ந்து 2.0 டப்பிங்கில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
| |

?????? :