.
 
 
 
 
 
 

பெண்ணிடம் நகை பறிப்பு

.

Tuesday, 27 June, 2017   04:43 PM
.
அம்பத்தூர், ஜூன் 27: ஆவடி அருகே சாலையில் தனியாக நடந்து சென்றுக் கொண்டி ருந்த பெண்ணிடம் 2 சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஆவடி லாசர் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி உதயா(வயது 28).  இவர் நேற்று அதே பகுதியில் 4வது தெருவில் இருக்கும் தனது தாயை பார்க்க சென்றுள்ளார். 
பின்பு 8.30 மணிக்கு அங்கிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் உதயா கழுத்தில் அணிந்திருந்த 2சவரன் தங்க நகையை பறித்து விட்டு அப்பகுதியில் இருந்து தப்பித்து சென்றுவிட்டார். 

இதுகுறித்து உதயா ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். 

.
| |

?????? :