.




 
 
 
 
 
 

விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ

.

Tuesday, 27 June, 2017   04:52 PM
.
ஸ்ரீஹரிகோட்டா, ஜூன் 27: தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோள் ஜிசாட்-17, வருகிற 29-ம் தேதி விண்ணில் பாயும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 8 முதல் 10 பிஎஸ்எல்வி ராக்கெட்களையும், தலா 2 ஜிஎஸ்எல்வி மார்க்-3, மார்க்-2 ராக்கெட்டுகளையும் விண்ணில் ஏவ வேண்டும் என இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 
அதன்படி தற்போது, தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 5,425 கிலோ எடைகொண்ட ஜிசாட்-17, ஏரியன் ராக்கெட் மூலம் வரும் 29-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் விண்ணில் பாய்கிறது.

விண்வெளியில் செய்ற்கைக்கோளை நிலைநிறுத்திய பின்னர் அதே ராக்கெட் பூமிக்கு திரும்பும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்கு கொண்டுவரப்படவில்லை. 

இதனால் தற்போது இந்த செயற்கைகோள் ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து செலுத்தப்படுவதாகவும், எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்தே இத்தகைய செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
.
| |

?????? :