.
 
 
 
 
 
 

தி.மலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

.

Tuesday, 27 June, 2017   04:54 PM
.
திருவண்ணாமலை, ஜூன் 27:  புதுவை பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை 9  மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் காலை 10 மணிக்கு அமித்ஷா வந்து இறங்கினார். 


.
அமித்ஷா வருகையையொட்டி வடக்கு மண்டல டிஐஜி தமிழ்சந்திரன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று மாலை முதல் திருவண்ணாமலை நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் போலீசார் வைத்திருந்தனர். அமித்ஷா வருகையையொட்டி பிஜேபி சார்பில் திருவண்ணாமலை நகரில் கட்அவுட் மற்றும் கொடி தோரணங்கள் வைக்கப்பட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
| |

?????? :