.
 
 
 
 
 
 

தம்பிதுரை பேட்டி

.

Tuesday, 27 June, 2017   04:56 PM
.
சென்னை, ஜூன் 27: அதிமுக ஆட்சியை கவிழ்த்து விடவேண்டும் என்று யார் நினைத்தாலும் அவர்களின் சதி முறியடிக்கப்படும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளர்.
.
இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தற்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறார். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஆட்சியை கலைத்து விடலாம் என்று திமுக மனப்பால் குடிக்கிறது. அது நடக்காது. மு.க.ஸ்டாலின் ஜாதகப்படி தோஷம் கழிப்பதற்காக ஜோசியர் அறிவுரையின்படி கோயில் குளங்களை தூர்வாரி வருகிறார்.பெரியார்,அண்ணாவின் சீடர் என்று சொல்லிக்கொண்டு கோயில் குளங்களை தூர்வாரி வருவது கேள்விக்குறியாக உள்ளது. வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தருவது குறித்து வலியுறுத்துவோம். தமிழகத்திற்கு கிடப்பில்போடப்பட்டுள்ள திட்டங்கள் விரைவில் செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் அதிமுக ஆட்சியை கவிழ்த்து விடவேண்டும் யார் நினைத்தாலும் அவர்களின் சதி முறியடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
| |

?????? :