.
 
 
 
 
 
 

மாணவியை தேள் கடித்தது

.

Thursday, 29 June, 2017   04:14 PM
.
அம்பத்தூர், ஜூன் 29:ஆவடியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டிருந்த மாணவியை தேள் கடித்தது. இதனையடுத்து அந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டது.

.
ஆவடியில் உள்ள ஹீமாகிலைட் க்ளைட் ஆர்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அரசு உதவிகள் பெரும் பள்ளியாக இயங்கி வருகிறது. இங்கு 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ளது. இந்நிலையில் கடந்த 3 தினங்கள் அரசு விடுமுறை முடிந்து கடந்த இரு தினங்களுக்கு முன் செவ்வாய் கிழமை அன்று வழக்கம் போல் இப்பள்ளி திறக்கப்பட்டது. பட்டாபிராம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி என்பவரின் மகள் மாணவி நிவேதா இப்பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி நிவேதா வழக்கம் போல் தனது சக மாணவிகளோடு பள்ளி அரையில் அமர்ந்து இருந்த போது அப்போது எதிர்பாராத நிலையில் பள்ளி சுவற்றில் இருந்த தேள் ஒன்று மாணவி நிவேதா மீது விழுந்து கை, கால்களை கடித்துள்ளது. விஷ பூச்சி கடி தாங்க முடியாமல் நிவேதா துடிதுடித்து அங்கே மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதணை கண்ட சக மாணவிகள் உடனே பள்ளி நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்தனர். பின்னர் பள்ளி நிர்வாகிகள் மயங்கி கிடந்த மாணவி நிவேதாவை மீட்டு ஆவடியில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நிவேதா தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பின் நிவேதாவின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து நிவேதாவின் பெற்றோர்கள் மருத்துவ மனைக்கு விரைந்து வந்து மருத்துவரிடம் தனது மகளின் உடல் நலத்தை கேட்டரிந்தனர்.
| |

?????? :