.
 
 
 
 
 
 

25 உயர்மட்ட பாலங்கள் :எடப்பாடி

.

Monday, 03 July, 2017   04:04 PM
.
 சென்னை, ஜூலை 3:நடப்பாண்டில் 2659 கிலோ மீட்டர்  நீளமுள்ள ஊரக சாலைகள் மற்றும் 25 உயர்மட்ட பாலங்கள் ரூ.1254 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று 
சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

.
சட்டசபையில் அவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் கூறியதாவது:2015-16ஆம் ஆண்டில், பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத் தின் கீழ், கடந்த 2 வருடங்களில், 8,875 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் 1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், 2017-18-ஆம் ஆண்டில், 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 3,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மத்திய அரசு, இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, 2017-18-ஆம் ஆண்டில் 2,659 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மற்றும் 25 உயர்மட்டப் பாலங்கள் 1,254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகளை வலுப்படுத்திடவும், உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், பயிற்சிகள் அளிப்பதற்கும், தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை கண்காட்சி நடத்தி விற்பனை செய்வதற்கும் ஏதுவாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டடங்கள் தலா 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1000 கட்டடங்கள் 600 கோடி ரூபாயில் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
| |

?????? :