.
 
 
 
 
 
 

குழந்தைக்கு ஜிஎஸ்டி பெயர்

.

Monday, 03 July, 2017   04:12 PM
.
ஜெய்ப்பூர், ஜூலை 3:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நேரத்தில் குழந்தை பிறந்ததால் அதற்கு ஜிஎஸ்டி என்று பெற்றோர்கள் பெயர் வைத்துள்ளனர்.

கடந்த ஜூன் 30 ஆம் தேதி இரவு ஒரு நாடு ஒரே வரி என்ற பெயரில் ஜிஎஸ்டி வரியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மோடியும் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது பேசிய மோடி, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிகப்பெரிய பொருளாதார மாற்றத்திற்குள் சென்றுள்ளது. கங்கா நகரில் இருந்து இட்டாநகர் மற்றும் லேவில் இருந்து லட்சத்தீவு வரை அனைத்து இடங்களிலும் ஒரே வரிதான் இனி என்றார். புதிய இந்தியா பிறந்துள்ளது என்று கூறினார் மோடி. மோடி பேசிக் கொண்டிருக்கும்போது, அன்று இரவு 12.02 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் பீவா என்ற இடத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியடைந்த அந்தக் குழந்தையின் தாய் குழந்தைக்கு உடனே ஜிஎஸ்டி பெயர் வைத்தார். இந்த செய்தியை ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா டுவீட் செய்துள்ளார். ”நீண்ட ஆயுள் பெற்று, ஆரோக்கியத்துடன் வாழ்க என்று வாழ்த்தியுள்ளார்.

.
| |

?????? :