.
 
 
 
 
 
 

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்

.

Monday, 03 July, 2017   04:14 PM
.
ஸ்ரீநகர், ஜூலை 3:ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, மறைந்திருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மலங்க்போரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, இளைஞர்கள் சிலர் ராணுவ வீரர்களை நோக்கி, கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், தீவிரவாதிகள் தப்பிக்க உதவியதாகவும் கூறப்படுகிறது.ராணுவ வீரர்கள் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது, வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டதில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். 
.
| |

?????? :