.
 
 
 
 
 
 

அபிராமி ராமநாதன் பரபரப்பு பேட்டி

.

Wednesday, 05 July, 2017   03:53 PM
.
சென்னை, ஜூலை 5:இன்று மாலையோ அல்லது நாளைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முழுவதும் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தொழில்நுட்பம் குறித்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு விளக்குவதற்காக 3டி டிஜிட்டல் கருத்தரங்கை லைகா நிறுவனம் இன்று சென்னையில் நடத்தியது. இதில் திரையரங்கு உரிமைõயளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, திருப்பூர் சுப்பிரமணியம், அன்புச்செழியன், லைகா சி.இ.ஓ., ராஜூமகாலிங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.நிகழச்சியில் பேசிய அபிராமி ராமநாதன் கூறுகையில்: முன்பெல்லாம் 2டியில் எடுத்து 3டியாக மாற்றுவார்கள். ஆனால் 2.0 படம் முழுக்க முழுக்க 3டியில் எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 960 திரையரங்குகள் இருந்தாலும் 3டி தொழில்நுட்பம் 300 தியேட்டர்களில் மட்டுமே உள்ளது. இந்த பயிற்சி மூலம அனைத்து தியேட்டர்களும் 3டி தொழில்நுட்பத்திற்கு மாற வாய்ப்புள்ளது.30% கேளிக்கை வரியை நீக்குவது தொடர்பாக தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. இன்று மாலையோ அல்லது நாளைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.மேலும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதற்கும் ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை விமர்சித்தது தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேட்டதற்கு, அதுபற்றி நான் கருத்துக் கூற முடியாது. அவர் என்ன கூறினார் என்றே எனக்கு தெரியாது. அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றார்.
| |

?????? :