.
 
 
 
 
 
 

தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் கோரிக்கை

.

Wednesday, 05 July, 2017   04:26 PM
.
சென்னை, ஜூலை 5:தமிழ் சினிமாவை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இருப்பதால் திரைத்துறை கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது. இதை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 3-ம் தேதி முதல் திரையரங்குகளை மூடி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

.
இது தொடர்பாக சினிமாத்துறையை சேர்ந்த அனைத்து சங்க பிரதிநிதிகளும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த உடனபாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ் சினிமாவை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
| |

?????? :