.
 
 
 
 
 
 

உமாபாரதிக்கு எடப்பாடி கடிதம்

.

Wednesday, 05 July, 2017   04:38 PM
.
சென்னை, ஜூலை 5:காவிரியில் மேகதாது உள்பட எந்த இடத்திலும் அணைகள் கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.இது தொடர்பாக உமாபாரதிக்கு  இன்று அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:-

.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு 19.2.2013-ல் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை மீறும் வகையில் மேகதாதுவில் பலநோக்கு நீர்பாசன திட்டத்தை மேற்கொள்வதற்கு மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடகம் அனுமதி கேட்டு இருப்பதாக செய்திகள் வெளியாக உள்ளன. இது தொடர்பாக 10.4.2013-ல் மற்றும் 8.1.2016-ல் நீங்கள் எழுதிய கடிதங்களில் சிவசமுத்திர நீர் மின் திட்டம், மேகதாது அணைத்திட்டம் ஆகியவை தொடர்பாக காவிரி பாசன மாநிலங்களுடன் கலந்து பேசுமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தி இருப்பதாக கூறியிருந்தீர்கள் என்பதை தங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். கர்நாடக அரசு மீண்டும் மேகதாதுவில் அணைக்கட்ட முயன்ற போது 25.2.2017-ல் நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவதற்கு முன் கர்நாடகத்தின் திட்டங்களுக்கு நீர்வள ஆணையம் அனுமதி வழங்க கூடாது என்று கூறியிருந்தேன். இது தொடர்பாக 27.2.2017-ல் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால் துரதிஷ்ட வசமாக தமிழக அரசின் முன் அனுமதியின்றி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு முரணமாக அணை திட்டத்திற்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அனுமதி வழங்குமாறு நீர் வள ஆணையத்திற்கு திட்ட வரைவு அறிக்கையை அனுப்பி இருக்கிறது. மேலும் சிவசமுத்திர நீர்மின் திட்டம், மேகதாது அணைத்திட்டம் ஆகியவை கர்நாடக அரசின் உரிமைகள் என்றும், அவை தேசிய நீர்மின் திட்ட கழகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கூறியிருக்கிறது.இந்த விஷயத்தை காவிரி நடுவர் மன்றம் இன்னும் தெளிவுபடுத்த வில்லை. மேலும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான தமிழக அரசின் மனு நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் மேகதாது உள்ளிட்ட கர்நாடக அரசின் எந்த நீர்பாசன திட்டத்திற்கும் அனுமதி வழங்க கூடாது என்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் அதிகாரிகளை தாங்கள் அறிவுறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் ஒழங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டு நீதிமன்ற அறிவுறுத்தல் படி இறுதிதீர்வு ஏற்பட வேண்டும். அதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படக்கூடாது. மேலும் காவிரி நீர் பிரச்சனைக்கு இறுதி தீர்வு ஏற்படும் வரை மேகதாது உள்ளிட்ட கர்நாடகத்தின் எந்த நீர்பாசன திட்டத்திற்கும் மத்திய அரசின் எந்த துறையும் அனுமதி வழங்க கூடாது.
| |

?????? :