தினப்பலன்
மேஷம்
(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

தன்னிச்சையாக முடிவு எடுக்கும்  குணமுள்ள மேஷராசியினரே, நீங்கள் பயமின்றி பேசக்கூடியவர். இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் ராசியில் புதனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
 
  கட்டுரைகள்
மேஷம்
(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)


ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரி டமும் சமமாக பழகும் மேஷராசியினரே, இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாக லாம். வார மத்தியில் உடற் சோர்வுகள் வரலாம். வார இறுதியில் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண் டாகும். சூரிய, சுக்கிரன் சஞ்சாரத்தால் வீடு, வாகனம் தொடர்பான செலவு குறை யும். வழக்கு விவகாரங்க ளில் கவனம் தேவை.