பேட்டி
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் ‘ரங்கா’  படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க்  என்ற இடங்களில்  நடந்தது. சிபிராஜ் - நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது.  

 
  வளரும் படங்கள்

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும்   படம் சவுகார்பேட்டை. ஸ்ரீகாந்த் - ராய்லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் மூன்று மொழிகளில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழில் சவுகார்பேட்டை , தெலுங்கில் ‘பேகம் பேட்டா’, ஹிந்தியில் ‘தந்திர சக்தி’ என்ற பெயரில் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.
 சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, சரவணன்,மனோபாலா,  விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவைசரளா,  பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி  ஆகியோர் நடிக்கிறார்கள்.


இப்படத்திற்கான இசை ஜான்பீட்டர், ஒளிப்பதிவு  சீனிவாசரெட்டி, பாடல்கள் நா.முத்துக்குமார், விவேகா
தயாரிப்பு   -  ஜான்மேக்ஸ்  -   ஜோன்ஸ்  கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான்.  படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்... இதுவரை பார்த்த ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி இருவரையும் இப்படம் வேறுபடுத்தி காட்டும் படமாக இருக்கும்..பேய் கதைதான் ஆனால் வேறு மாதிரியான உணர்வை இது தரும் என்றார் வடிவுடையான்.

செப்டம்பர் மாதம் மூன்று மொழிகளிலும் வெளிவர உள்ளது சவுகார்பேட்டை

 
  திரை வரலாறு

பெண்களை வெறும் போதைப் பொருளாக நினைப்பவர்களை எதிர்த்து குரல் கொடுப்பவர் நாயகி சாந்தினி. ஓர் இளம்பெண்ணுக்கு டார்ச்சர் கொடுக்கும் ஒரு தொழில் அதிபருடன் மோதும் இவருக்கு பல சிக்கல்கள் வருகின்றன. தொழிலதிபர் பல்வேறு வழிகளில்
சாந்தினியை பழிவாங்கத் துடிக்கிறார்.


 
  சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகிறார் தமன்னா. பிரபாஸ் நடிக்கும் நேரடி இந்திப்படமான காமோஷி படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் தமன்னா இல்லத்தில் கல்யாணக் கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது.

மும்பையை பூர்வீகமாக கொண்ட தமன்னாவின் பெற்றோர்கள் வைர நகைக்கடை வைத்துள்ளனர். தமன்னா தான் வீட்டின் முதல் பிள்ளை, அவரது தம்பி ஆனந்த் பாட்டியா. இந்நிலையில் தமன்னாவின் தம்பிக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனையொட்டி மெஹந்தி போட்டுக்கொண்ட புகைப்படங்களையும், உற்சாகத்தில் அவர் நடனமாடும் புகைப்படங்களையும் இண்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருக்கிறார். குடும்பத்தினருடன் இருக்கும் நேரமே மிகச்சிறந்த தருணம் என அவர் தெரிவித்துள்ளார். 
சிவப்பு சோளியில் தமன்னா நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 
  சாதனையாளர்கள்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோர் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் சிம்ரன், ராதிகா, பார்த்திபன், டிடி, வம்சி உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர்.

அண்மையில் இப்படத்திற்காக 22 நாள்களில், 12 கலைஞர்கள் பங்களிப்புடன்4 நாடுகளுக்கு பயணித்து சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கியிருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்பட்ட முதல்முயற்சி.சுலோவேனியா, பல்கேரியா,துருக்கி மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில்,12 சண்டைக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இந்த நாடுகளுக்கு சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளர்களும், ஒளிப்பதிவாளர் மனோஜும் முன்னதாக பயணித்து தென்னிந்திய திரைப்படங்களில் இடம்பெறாத இடங்களாக தேர்ந்தெடுத்தனர்.

வித்தியாசமான கதைகளில் தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் பல படங்களில் பணியாற்றியபோதிலும் பேஷன் பிலிம் மேக்கரான கௌதம் வாசுதேவ மேனனுடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. இதற்காக கடின முயற்சி செய்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.