பிற

எத்தனை ஆண்டுகளானாலும்  பழைய பாட்டுகள்  கேட்டாலே மெய்மறந்து ரசிக்கும்  ரசிகசீமான்கள் ஆயிரமாயிரம்.  பழைய பாடல்களில் உள்ள பாட்டுகளில் ஒரு வரிக்கு ஒரு அர்த்தத்துடன்  இலைமறை காய்மறைவாக கண்கள் மட்டுமே பேசும் பாடல்களை  குடும்பத்துடன் சேர்ந்த கேட்டு மகிழும் காலம் எப்போது வருமோ என்று ஏங்கும் ரசிகர்கள் மத்தியில் பாட்டுக்கேட்கவே எனது ஆட்டோவில் காத்திருந்து சாவரி செய்யும் பயணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறுகிறார்  58 வயதானஆட்டோ டிரைவர் சாம்பசிவம்.