Maalaisudar



 
 
 
 
 
 
 




.
ஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்
 
.
Wednesday, 22 April, 2015 04:09 PM
.
தாம்பரம் ,ஏப்.22: சிட்லப்பாக்கம், எம்சி நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ ஸாயி விபூதிபாபா சமேத ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.  
.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாபாவின் அருளை பெற்றுச்சென்றனர்.
சிட்லப்பாக்கம், எம்சி நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ ஸாயிவிபூதிபாபா சமேத ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆலயத்தில் இன்று காலை  மஹா கும்பாபிஷேகத்தையொட்டி  18ம்தேதி   மாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி,  மஹாசாந்தி,  ஜபஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

19 முதல் 21ம்தேதி வரை  4 கால பூஜைகள்,  யாகபூஜை,  ஜபஹோமம்,  தத்வாஹூதி நாடி சந்தானம்,  மஹாஹூதி, அஷ்டாவதனாஸேவா, தீபாராதனை, அஷ்டபந்த ஸமர்ப்பணம் ஆகிவை சிறப்பாக நடைபெற்றது.

22ம்தேதி இன்று காலை 5 மணிக்கு   6ம் கால யாகபூஜை,  ஜபஹோமங்கள், ஸ்பர்ஸாஹூதி, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு  கலசயாத்ரா (கடங்கள் புறப்பாடு)  காலை 9.20 மணி முதல்  10 மணிக்குள் விமான, மூலஸ்தான ஸத்குரு நாதர்களுக்கு மஹா கும்பாபிஷேகம்  மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

காலை 11 மணிக்கு  மூலமூர்த்திகள் மஹா கும்பாபிஷேகம் மற்றும் ஸஹஸ்ரநாமம், தீபாராதனை  ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தில் வேத விற்பன்னர்கள் பங்கேற்று சிறப்புர நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாபாவின்அருளை பெற்றுச் சென்றனர்.  பின்னர் பகல் 1 மணிக்கு  பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

23.4.2015 வியாழக்கிழமை முதல்  48 நாட்களுக்கு ஆலயத்தில் மண்டலாபிஷேகம் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை ஸத்குரு ஸ்ரீசாயி விபூதி பாபா உடனுறை  ஷீரடி ஸாயி பாபா ஆலய பக்தர்கள் சிறப்பாக செய்துள்ளனர்

தொடர்புக்கு: 8754402361.
| |

மற்றவை :